ரேஷன் கடை திறப்பு விழா
03 Feb 2020 Admin

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட
பாலகிருஷ்ணாபுரத்தில் மகளிர் சுய உதவிக் கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி
வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன் பேரில்
எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் ஐந்தரை லட்சம்
மதிப்பில் அங்கு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை கட்ட ஏற்பாடு செய்தேன்.
இந்நிலையில் இந்த புதிய ரேஷன் கடை கட்டிடம் திங்களன்று திறந்து
வைத்தேன். இதில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சங்கரி, வட்டார வளர்ச்சி
அலுவலர் சூர்ய நாராயணனன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். தங்கள்
பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை திறக்கப்பட்டதை கண்டு
அப்பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்ததோடு நன்றியையும்
தெரிவித்தனர்.
See More Stories
03 Aug 2020
நேரில் சந்தித்து நிதியுதவி ...
கும்மிகழகத் தலைவர் @mkstalin அவர்களின் உத்தரவுக்கிணங்க திருவள்ளூர் வடக்கு, மீஞ்சூர் பேரூராட்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களை நேரில் சந்தித்து நிதியுதவ...