Pradhan Mantri Jan Dhan Yojana

03 Feb 2020 Admin

Dena Bank invited me to Launch the "Pradhan Mantri Jan Dhan Yojana" scheme to the people of Gummidipoondi.
கும்மிடிப்பூண்டியில் உள்ள தேனா வங்கியிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது, விழாவில் நான் சிறப்பு அழைப்பாளராக ல்கலந்துக் கொண்டு பேசினேன், அப்போது இந்திய நாட்டில் 15 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்ற நிலையில் மத்திய அரசின் இந்த திட்டம் மிகவும் சிறப்பான திட்டம் என்பதால் வங்கி அதிகாரிகள் மட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகளும் இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற பாடுபடவேண்டும். அதே நேரம் கிராமங்களில் அதிக அளவு வங்கி கணக்காளர்களை பெற்று அவர்களை அதிக அளவு
பரிவர்த்தனையை செய்ய வங்கி ஊக்குவித்து கிராமங்களில் சிறு தொழில் பெருக்கத்தை உருவாக்கும் போதே நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் என்றேன், மேலும் அரசின் இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகிறதே ஒழிய இதனால் தமிழகத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லை, தமிழகம் உண்மையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், உற்பத்தி பெருக்கம் அதிகரிக்க வேண்டும், உற்பத்தி பெருக்கம் அதிகரிக்கும் போது மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும் என்ற நிலையில் வேளாண்மை மற்றும் சிறுதொழில் பெருக்கத்திற்கு வங்கிகள் பயிற்சி அளிப்பதோடு விவசாயிகளுக்கு கடனுதவியும் அளிக்க வேண்டும் என்றேன்.

Pradhan Mantri Jan Dhan Yojana Pradhan Mantri Jan Dhan Yojana Pradhan Mantri Jan Dhan Yojana Pradhan Mantri Jan Dhan Yojana