Republic Day 2015
03 Feb 2020 Admin

கும்மிடிப்பூண்டியில் குடியரசு தின விழாவை ஒட்டி எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடியை ஏற்றி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினேன், தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பெரிய பள்ளி வாசல் இஸ்லாம் சமூகத்தினர் நடத்திய மத நல்லிணக்க சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக நான் பங்கேற்றேன்.அங்கும் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றும் போது இந்தியாவின் இந்தாண்டு குடியரசு தின விழாவை பிரதமர் மோடி கொடியேற்ற அதை அமெரிக்க அதிபர் ஒபாமா கை தட்டி ரசித்த வித்தியாசமான குடியரசு தின விழா இது என்றும் , இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம் மக்கள் ஆற்றிய தியாகத்தை பற்றி குறிப்பிட்டு பேசினேன்.. மேலும் நாட்டில் மதநல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் இந்து, மூஸ்லீம், கிறிஸ்துவ சமுதாயத்தினர் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், எல்லா மதத்தினரும் இனி வருங்காலத்தில் பிற மதத்தினரின் விழாக்களில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும், தேசிய விழாக்களை அனைத்து மதத்தினரும் சேர்ந்தே கொண்டாட வேண்டும் என்றேன், மேலும் இன்றைய இளைஞர்கள் ஒழுக்கத்தை பேணி காப்பதோடு, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், நல்ல குறிக்கோளோடு வாழ்வில் உழைத்து நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்கிணை அளிக்க வேண்டும் என்றேன், தொடர்ந்து பள்ளி மாணவர்கள் 66 பேருக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கியதோடு இனிப்புகளையும் வழங்கினேன். தேசிய விழாவில் இன்று பொதுமக்கள் மகிழ்ச்சிகரமாக அவர்களது வாழ்த்தை தெரிவித்த வேளையில் , அவர்களோடு எனது எண்ணங்களை பகிர முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன், வந்தே மாதரம் - ஜெய்ஹிந்த் , வாழ்க பாரதம், வளர்க தமிழகம்.
See More Stories
03 Sep 2020
#தலைவர்_கலைஞர் இந்த தமிழினத்தி...
#தலைவர்_கலைஞர் இந்த தமிழினத்தின் தலைவர் என்பதை நினைவில் வையுங்கள். அப்படியே, மச்சான் முன்னேற்றக் கழகம் என மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி @nakkheeranweb...