வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழா
03 Feb 2020 Admin

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கோதண்டராமர் உயர்நிலைப் பள்ளியில் எனது கும்மிடிபூண்டி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரு வகுப்பறை கட்ட ரூபாய் 9 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தேன். இந்த இரு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட எனக்கு பள்ளி நிர்வாகம் சிறப்பான வரவேற்பு அளித்த நிலையில் விழாவில் நான் பேசும் போத. இன்றைய மாணவர்களுக்கு பல்வேறு கடமைகள் அவர்கள் முன் உள்ளது என்றும் அதை நிறைவேற்றும் பொறுப்பு அவர்களுடையது என்றும் பேசினேன். ""வரலாற்றில் எல்லாருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதை உலகத்தைப் படிக்க வைப்பது நமது கையில்தான் உள்ளது,'' என்ற நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மாணவர்களுக்கான அறிவுரையை மாணவர்களின் முன்வைத்தேன்..
அப்துல்கலாம் ஆனாலும், ஆபிரகாம் லிங்கன் ஆனாலும், ஆம்ஸ்ட்ராங் ஆனாலும், சர்.சி.வி.இராமன் ஆனாலும் அவர்கள் இன்று படைத்த வரலாறு அவர்களது மாணவப் பருவத்தில் அவர்களது மனதில் விதைத்துக் கொண்டது.. என்றாவது உலக வரலாற்றில் நாம் இடம் பெறுவோம் என்ற இலக்கை அவர்கள் மாணவப் பருவம் முதலே நினைத்து அதை நோக்கி முயன்றதே இன்று நாம் அவர்களை பற்றி பெருமையோடு படிக்கும் நிலைக்கு காரணம். இதை புரிந்துக் கொண்டால் எல்லா மாணவர்களுக்கும் நாளைய சரித்திர பக்கங்கள் காத்திருக்கின்றன என்றேன்,.
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வெல்ல 5 விஷயங்கள் அவசியம். முதலில் லட்சியம் வேண்டும். அதை அடையக் கூடிய அறிவைத் தேடிப்பெற வேண்டும். அதற்கு கடும் உழைப்பு வேண்டும். பிரச்னைகளைக் கண்டு பயப்படக் கூடாது. பிரச்னைகளைத் தோல்வியடையச் செய்து, வெற்றியடைய வேண்டும். விடாமுயற்சி வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒழுக்கம் வேண்டும்.குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகிற்கும் நல்லதொரு அங்கமாக இருப்பேன் என்ற உறுதி மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் சமூகத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக மாற வேண்டும் என்று வாழ்த்தி பேசினேன்,.
சிறப்பாக நடைபெற்ற அந்த விழாவில் மாணவர்கள் ஆர்வத்தோடு எனது உரையை கேட்டதோடு நிச்சயம் அவர்கள் பிற்காலத்தில் நல்ல இந்திய குடிமக்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து பிரியா விடை பெற்றேன்
See More Stories
30 Oct 2020
The foundation of a metropolit...
The foundation of a metropolitan city's infrastructure can be seen from in its drainage system, not merely the fancy roads and skyscrappers. If that ...