OBC இடஒதுக்கீடு

03 Aug 2020 Admin

OBC இடஒதுக்கீடு - திமுகவின் தொடர் முயற்சி தேதி வாரியாக: ( 2019-2020)

26.07.2019 : OBC இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திரு. வில்சன் எம்.பி பேச்சு.

1.11.2019 : OBC இட ஒதுக்கீடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

21.11.2019 : OBC இட ஒதுக்கீடு தொடர்பாக திரு. டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பேச்சு.

21.11.2019 : OBC இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்.

22.11.2019 : MBBS, OBC இட ஒதுக்கீடு குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென தலைவர் வலியுறுத்தல்.

06.12.2019 : OBC இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திரு. வில்சன் எம்.பி பேச்சு.

09.12.2019 : OBC இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திரு. திருச்சி சிவா எம்.பி பேச்சு.

06.01.2020 : OBC இட ஒதுக்கீடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை திமுக எம்.பி திரு. வில்சன் நேரில் சந்தித்து கோரிக்கை.

15.03.2020 : OBC இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழச்சி தங்கப்பாண்டியன் நாடாளுமன்றத்தில் பேச்சு.

15.05.2020 : OBC இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதிலளிக்கவில்லை என்று தலைவர் கண்டன அறிக்கை.

27.05.2020 : மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டி தலைவர் கண்டனம்.

28.05.2020 : அகில இந்திய மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்றத்தை நாடியது திமுக.

31.05.2020 : மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மறுத்து வரும் மத்திய அரசை கண்டித்து காணோளி காட்சி வாயிலாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11.06.2020 : உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து.. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு.

13.06.2020 : இடஒதுக்கீடு, அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை! தி.மு.க.,வும் தோழமைக் கட்சிகளும் எழுப்பிய முழக்கம் தேசிய அளவில் எதிரொலித்திருக்கிறது. இது முதற்கட்ட வெற்றிதான். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தி.மு.க. தொடர்ந்து போராடும்! - என தலைவர் அறிக்கை.

19.06.2020 : மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், OBC மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு தருவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில்.

19.06.2020 : திமுக-வின் சமூகநீதிப் போராட்டத்தில் மேலுமொரு வெற்றியாக மருத்துவ சேர்க்கையில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்கத் தயார் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இது முதல்கட்ட வெற்றி. 69% அடிப்படையில் OBCக்கு 50% #Reservation பெற தொடர்ந்து போராடுவோம்! - என தலைவர் அறிக்கை.

16.07.2020 : காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக எம்எல்ஏ மற்றும் எம்பி கூட்டத்தில், OBC மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

21.07.2020 : பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் தங்களது உரிமைகளுக்காக உறுதியுடன் போராட முன்வர வேண்டும்!

சமூகநீதி- அரசியல் சட்டம் அளித்த உரிமை; பாஜக அரசால் பறிக்கப்படும் உரிமை.

ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்! திசைதிருப்பும் நாடகங்களில் தமிழ்ச் சமூகம் ஏமாந்துவிடும் என நினைப்போர் தோற்றோடுவர்! - என தலைவர் அறிக்கை.

27.07.2020 : OBC இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து போராட பாஜக அல்லாத மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு.

27.07.2020 : சென்னை உயர்நீதிமன்றத்தில் OBC குறித்து தீர்ப்பு - முதல் வெற்றி!

28.07.2020 : OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறபிக்க கூடாது என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் TKS இளங்கோவன் எம்.பி!